இரான் அதிபருக்கு இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டதாக வைரலாகும் காணொலி 
Tamil

Fact Check: உயிரிழந்த இரான் அதிபருக்கு இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்பட்டதாக வைரலாகும் காணொலி; உண்மை என்ன?

Ahamed Ali

கடந்த 19ஆம் தேதி இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் உயிரிழந்தனர். மேலும், அதில் இருந்து யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என இரான் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், “இரான் ஜனாதிபதி மற்றும் ஏனையவர்களது ஜனாஸா தொழுகையின் போது” என்று காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், உயிரிழந்த இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் ஏனையவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதித் தொழுகை நடத்தப்படுவதாக கூறி காணொலியைப் பகிர்ந்து வருகின்றனர்.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி சிரியாவில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இரானியர்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்ற போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம்.

அப்போது, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி Getty Images இது தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், “டமாஸ்கஸில் உள்ள தூதரக வளாகத்தில் உள்ள இரான் தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கில் இரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

Getty Images வெளியிட்டுள்ள புகைப்படம்

தொடர்ந்து தேடுகையில் இதே தகவலுடன் The Jerusalem Post என்ற ஊடகமும் இதே புகைப்படத்துடன் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக Tasnimnews என்ற பெர்சிய மொழி ஊடகம் வைரலாகும் காணொலியுடன் இஸ்ரேலின் தூதரக தாக்குதலில் உயிரிழந்த ஏழு பேரின் உடல்களுக்கு இரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி இறுதிச் சடங்கு மேற்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடல் முடிவாக இரான் அதிபர் ரைசிக்கு இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படுவதாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் அது சிரியாவில் உள்ள இரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஈரானியர்களுக்கு இறுதிச் சடங்கு நடத்திய போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Video of Nashik cop prohibiting bhajans near mosques during Azaan shared as recent

Fact Check: ഫ്രാന്‍സില്‍ കൊച്ചുകു‍ഞ്ഞിനെ ആക്രമിച്ച് മുസ്ലിം കുടിയേറ്റക്കാരന്‍? വീഡിയോയുടെ വാസ്തവം

Fact Check: சென்னை சாலைகள் வெள்ளநீரில் மூழ்கியதா? உண்மை என்ன?

ఫ్యాక్ట్ చెక్: హైదరాబాద్‌లోని దుర్గా విగ్రహం ధ్వంసమైన ఘటనను మతపరమైన కోణంతో ప్రచారం చేస్తున్నారు

Fact Check: ಆಹಾರದಲ್ಲಿ ಮೂತ್ರ ಬೆರೆಸಿದ ಆರೋಪದ ಮೇಲೆ ಬಂಧನವಾಗಿರುವ ಮಹಿಳೆ ಮುಸ್ಲಿಂ ಅಲ್ಲ