fifthestatedigital1
Tamil

Fact Check: மாணவர்களுக்கு ரூ.500 வழங்க, அதைவிட அதிக செலவில் காசோலை பேனர் அடிக்கப்பட்டதாகப் பரவும் தகவல்? உண்மை என்ன

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு ஒருமுறை மட்டும் ரூ.500 வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் காணொலியின் பின்னணி என்ன என்பது குறித்து விளக்குகிறது இக்கட்டுரை

Southcheck Network

அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு ரூ.500 உதவித்தொகைக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கியதாகவும், அந்த உதவித்தொகையை விட காசோலைக்காக வழங்கப்பட்ட பேனருக்கு அதிக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொலிவில் மாணவர்களுக்குப் பணம் வழங்குவதற்கு அடையாளமாக காசோலை பேனர்களை வழங்குவதைக் காண முடிகிறது. அதில் 'ரூ.500 மட்டும்' என்று இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஒருமுறை மட்டுமே இந்த சொற்பத் தொகை வழங்கப்படுவதாகப் பலரும் இதனை விமர்சித்துப் பகிர்ந்து வருகின்றனர்.

Fact Check

இந்த வைரல் காணொலி குறித்து சவுத்செக் குழு ஆய்வு செய்ததில், இது தவறாக வழிநடத்தும் ஒரு பதிவு என்பது உறுதியானது.

மாணவர்களுக்கு வெறும் 500 ரூபாய் மட்டும் ஒரே ஒரு முறை வழங்கப்படவில்லை; மாறாக, இது மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையாகும். அரசு வெளியிட்ட முழுமையான காணொலிவை கூர்ந்து கவனித்ததில், அந்தப் பேனரில் 'Rs. 500 Every Month' (மாதந்தோறும் ரூ.500) என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகளில் பயிற்சி பெறும் 2,600 பேருக்கு ஆண்டுக்கு 1.77 கோடி ரூபாய் வழங்கும் உதவித்தொகைத் திட்டத்தின் தொடக்கமே இது. 2,600 பேருக்கு ஒவ்வொரு மாதமும் இந்தத் தொகை வழங்கப்படுவதன் அடையாளமாகவே மேடையில் இரு மாணவர்களுக்கு மட்டும் காசோலை பேனர்கள் வழங்கப்பட்டன.

இதனை உறுதிப்படுத்தும் முதல் ஆதாரமாக, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை (TNDIPR) தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு மற்றும் காணொலிவை சுட்டிக்காட்டலாம். இரண்டாவது ஆதாரமாக, பிபிசி தமிழ் ஊடகம் 'விளையாட்டு வீரருக்கு ரூ. 500 வழங்கியது ஏன்?' என்ற தலைப்பில் அக்டோபர் 30 அன்று BBC Tamil வெளியிட்ட விளக்கச் செய்தியைக் காணலாம். மூன்றாவது ஆதாரமாக, தமிழ்நாடு அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு (TN IID) தங்களது எக்ஸ் பக்கத்தில் இது மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை என உறுதிப்படுத்தி அளித்த அதிகாரப்பூர்வ விளக்கப் பதிவை இங்கே காண முடிகிறது.

Conclusion:

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாகப் பரவும் தகவல் முற்றிலும் தவறானது. இது 2,600 வீரர், வீராங்கனைகளுக்கு மாதந்தோறும் தொடர்ந்து வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகைத் திட்டமாகும். இதன் அடையாளமாகவே மேடையில் காசோலை பேனர் வழங்கப்பட்டது என்பதை சவுத்செக் உறுதி செய்கிறது.

Fact Check: Chinese and Indian armies clash at border in viral video? No, here are the facts

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ಬಿಜೆಪಿ ಸರ್ಕಾರ ಇರುವ ಬಿಹಾರದಲ್ಲಿ ಯುವತಿಯ ಅಪಹರಣ? ಇಲ್ಲ, ಇದು ಸ್ಕ್ರಿಪ್ಟ್ ಮಾಡಿದ ವಿಡಿಯೊ

Fact Check: ఆంధ్రప్రదేశ్‌లో స్థానిక సంస్థల ఎన్నికల నామినేషన్ల సమయంలో హింసకు సంబంధించిన వీడియోనా? కాదు, ఇది 2023 నాటిది

Fact Check: Video shows massive crowd at Rahul Gandhi’s ‘Chalo Dilli’ rally? No, unrelated video is viral