இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் நெதர்லாந்து அரசாங்கம் ஒரு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச அங்கீகாரத்தின் குறிப்பிடத்தக்க அடையாளமாகும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் உலக அஞ்சல் தினத்தன்று நெதர்லாந்தில் வெளியான அஞ்சல் தலை என்றும் தெரியவந்தது.
"RSS-ஐ கௌரவிக்கும் விதமாக நெதர்லாந்து அரசாங்கம் அஞ்சல் தலைகளை வெளியிட்டதா?" மற்றும் "RSS அமைப்பின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாட நெதர்லாந்து நினைவு அஞ்சலை வெளியிட்டதா?" என்பது போன்ற கீவர்ட்களை பயன்படுத்தி கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, அது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது.
ஆனால், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ஆர்எஸ்எஸின் அதிகாரப்பூர்வ இதழான Organiser வெளியிட்டுள்ள செய்தி கிடைத்தது. அந்தக் கட்டுரையின்படி, அதன் சொந்த நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, நெதர்லாந்தில் உள்ள இந்து சுயம்சேவக் சங்கம் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உலக அஞ்சல் தினமான அன்று வைரலாகும் அஞ்சல் தலையை அறிமுகப்படுத்தியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் அஞ்சல் சேவையான PostNL, RSSற்காக ஏதேனும் அஞ்சல் தலையை வெளியிட்டதா என்பதை கண்டறிய, கூடுதலாக PostNLன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டோம். ஆனால், அதில் எந்தவொரு பொருத்தமான பதிவும் வெளியிடப்படவில்லை. மேலும், எந்தவொரு படத்தையும் பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கென்று அஞ்சல் தலைகளை உருவாக்க உதவும் ஒரு பகுதியை அதில் நாங்கள் அடையாளம் கண்டோம்.
இதன்மூலம், வைரலாகும் அஞ்சல் தலை மேலே குறிப்பிடப்பட்ட தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இது, ஆர்எஸ்எஸின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நெதர்லாந்து அரசாங்கம் முறையாக ஒரு நினைவு அஞ்சல் தலையை வெளியிடவில்லை என்பதைக் குறிக்கிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நெதர்லாந்து ஒரு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளதாக வைரலாகும் தகவல் தவறானவை என்று தெரியவந்தது.