தனது அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா என்று வைரலாகும் புகைப்படம் 
Tamil

Fact Check: நடிகை சமந்தா தனது அரை நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டாரா?

அரை நிர்வாண புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த மே 5ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எடுத்துக்கொள்ளும் Far Infrared Sauna என்ற சிகிச்சை குறித்த விழிப்புணர்வு புகைப்படத்தை ஸ்டோரியாக வெளியிட்டு இருந்தார். தற்போது, இப் புகைப்படத்தோடு சேர்ந்து முகம் இல்லாத பெண் ஒருவர் குளியல் தொட்டியில் அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படமும் சேர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரை நிர்வாண தோற்றத்தில் இருக்கும் பெண் சமந்தா என்று கூறி பகிர்ந்து வருகின்றனர்.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது ஆபாசப்பட நடிகை என்பது தெரியவந்தது. இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இன்று(மே 7) SiDManchikanti என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

ஒரே மாதிரியான புகைப்படங்கள்

அதில், “நடிகை சமந்தா என்று வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது Venus Valencia என்ற ஆபாசப்பட நடிகை” என்று Venus Valenciaவின் உண்மையான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் உள்ள Venus Valenciaவின் முகத்தை மட்டும் மறைத்துவிட்டு நடிகை சமந்தா என்று முகம் இல்லாத புகைப்படத்தை தவறாக பரப்பி வருவதை நம்மால் அறிய முடிந்தது.

மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக Venus Valencia தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (மே 7) பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய நடிகை என்று எனது புகைப்படம் தவறாக பகிரப்பட்ட வருகிறது. சொல்வதற்கு அதிகம் உள்ளது, இருந்தாலும் எனக்கு பிடித்தமான இடத்தில் (இந்தியா) ஒரு பெண்ணின் உடலைக் குறித்து இவ்வாறான தவறான முடிவுடன் இருப்பது இதயத்தை கணக்க செய்கிறது” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

Conclusion:

நம் தேடலின் முடிவாக நடிகை சமந்தா அரை நிர்வாணத்துடன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்டதாக வைரலாகும் புகைப்படம் ஆபாசப்பட நடிகை Venus Valencia என்பவருடையது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Tamil Nadu police attack Hindus in temple under DMK govt? No, video is from Covid lockdown

Fact Check: സോണിയഗാന്ധിയുടെ കൂടെ ചിത്രത്തിലുള്ളത് രാഹുല്‍ഗാന്ധിയല്ലേ? പ്രചാരണത്തിന്റെ സത്യമറിയാം

Fact Check: ஆர்எஸ்எஸ் தொண்டர் அமெரிக்க தேவாலயத்தை சேதப்படுத்தினரா? உண்மை அறிக

Fact Check: ಇಂಡೋನೇಷ್ಯಾದ ಸುಮಾತ್ರಾ ಪ್ರವಾಹದ ಮಧ್ಯೆ ಆನೆ ಹುಲಿಯನ್ನು ರಕ್ಷಿಸಿದ್ದು ನಿಜವೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: బాబ్రీ మసీదు స్థలంలో రాహుల్ గాంధీ, ఓవైసీ కలిసి కనిపించారా? కాదు, వైరల్ చిత్రాలు ఏఐ సృష్టించినవే