fifthestatedigital1
Tamil

Fact Check: ஸ்பெயின் நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் ஃபிஃபா உலகக் கோப்பைகளை வென்ற முதல் நாடாக வரலாற்று சாதனை படைத்துள்ளதா?

ஆண்கள் மற்றும் பெண்கள் ஃபிஃபா உலகக் கோப்பைகளை ஒரே நேரத்தில் தன்வசம் வைத்துள்ள முதல் நாடு என்ற என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ள ஸ்பெயின் என்று சமூக வளைதலங்களில் வைரலாகும் தகவல்

Southcheck Network

ஸ்பெயின் நாடு கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளதாக பரவி வரும் செய்திகள் மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, ஃபிஃபா ஆண்கள் உலகக் கோப்பை மற்றும் பெண்கள் உலகக் கோப்பை ஆகிய இரண்டையுமே ஒரே காலகட்டத்தில் தன்வசம் வைத்திருக்கும் முதல் நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளதாகத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது.

ஸ்பெயின் அணி ஆண்கள் மற்றும் பெண்கள் ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup) பட்டங்களை வென்ற முதல் நாடா என்ற தேடினோம். அப்போது, 1954-ல் மேற்கு ஜெர்மனி (West Germany) பெயரில் ஆண்கள் உலகக் கோப்பையையும், பின் 2003-ல் ஜெர்மனி மகளிர் உலகக் கோப்பையையும் வென்றது. இதனால், இரு பிரிவுகளிலும் உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமை ஜெர்மனியைச் சேரும். பின்னர், 2014-ல் மீண்டும் ஆண்கள் உலகக் கோப்பையையும் ஜெர்மனி கைப்பற்றியது. இது குறித்த தகவல் FIFAவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுள்ளது.

தொடர்ந்து தேடுகையில் 2023-ல் மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி, தொடர்ந்து 2026 ஆண்கள் உலகக் கோப்பையையும் வென்றுள்ளது. இதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் ஃபிஃபா உலகக் கோப்பை பட்டங்களை ஒரே நேரத்தில் (simultaneously) தன்வசம் வைத்திருக்கும் முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்பெயின் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக, ஆண்கள் மற்றும் பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை ஜெர்மனி இதற்கு முன்பாகவே பெற்றுள்ளது என்று உறுதியானது.

Fact Check: People break idols, convert to Islam over Nepal floods? No, video is from South Korea

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: முதல்வர் விஜய் பாணியில் விநாயகர் சிலை செய்யப்பட்டதாகப் பரவும் படம்: உண்மை என்ன?

Fact Check: ನೇಪಾಳದ ಪ್ರವಾಹದಲ್ಲಿ ಸಿಲುಕಿದ್ದ ವ್ಯಕ್ತಿಯನ್ನು ಆನೆಯೊಂದು ರಕ್ಷಿಸಿತೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ‘బాంబు పరీక్ష’లో మదర్సా టీచర్, కుటుంబం మృతి? కాదు, వీడియోలో కనిపించింది సిలిండర్ పేలుడు