fifthestatedigital1
Tamil

Fact Check: தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இலவச ரீசார்ஜ் வழங்குகிறதா? உண்மை அறிக

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்வரானதும் அனைவருக்கும் இலவச மொபைல் ரீசார்ஜ் என சமூக வலைதளங்களில் இணைய லிங்க் ஒன்று பரவி வருகிறது

Southcheck Network

தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு அனைவருக்கும் இலவசமாக மொபைல் ரீசார்ஜ் வழங்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் இணைய லிங்க் கொண்டு வைரலாகி வருகிறது

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் ஸ்பேம் என்று தெரியவந்தது.

வைரலாகும் இணைய லிங்கின் உண்மை தன்மையை கண்டறிய இவ்வாறு எந்த ஒரு அறிவிப்பையும் தவெக வெளியிட்டுள்ளதா என்று அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். ஆனால், அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், இதுதொடர்பாக செய்தி ஏதும் வெளியிட்டுள்ளதா என்று தேடியபோதும் அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது.

தொடர்ந்து, வைரலாகும் இணைய லிங்க்கை கிளிக் செய்து பார்த்தோம். அப்போது, முதலில், ‘TVK Celebration’, ‘Welcome fans’, ‘TVK free recharge’ என்ற வாஙகங்களுடன் Next என்ற பட்டன் இடம்பெற்றுள்ளது. அதனை கிளிக் செய்தால், ‘Share celebration with friends’ என்ற தகவலுடன் வைரலாகும் இணைய லிங்கை பிறருக்கு வாட்ஸ் அப்பில் ஷேர் செய்வது போன்ற அமைப்பு தோன்றுகிறது. பொதுவாக இவ்வாறு ஒரு தகவலை Whatsapp மூலம் பிறருக்கு அனுப்பக்கூறும் அனைத்து இணைய லிங்குகளும் ஸ்பேமாகவே இருக்கும். மேலும், இதனை ஷேர் செய்வதனால் நமக்கு எவ்வித இலவச மொபைல் ரீசார்ஜ்ஜும் கிடைக்காது என்பதே உண்மை.

Conclusion:

முடிவா, நம் தேடலில் தவெக அரசு அமைந்ததற்காக அனைவருக்கும் இலவச மொபைல் ரீசார்ஜ் என்று வைரலாகும் இணைய லிங்க் ஒரு ஸ்பேம் என்று தெரியவந்தது.

Fact Check: Nepal floods–Rescue operation saves stranded man? No, video is from Mexico

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: முதல்வர் விஜய் பாணியில் விநாயகர் சிலை செய்யப்பட்டதாகப் பரவும் படம்: உண்மை என்ன?

Fact Check: ನೇಪಾಳದಲ್ಲಿ ಪ್ರವಾಹ ನಂತರ ಮುಸ್ಲಿಮರಿಂದ ಕುರಾನ್ ಪಠಿಸಿ ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡಲಾಗುತ್ತಿದೆಯೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ‘బాంబు పరీక్ష’లో మదర్సా టీచర్, కుటుంబం మృతి? కాదు, వీడియోలో కనిపించింది సిలిండర్ పేలుడు