இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய நபரை இரு மாடுகள் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இது மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற சம்பவம் என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த ஜூன் 26ஆம் தேதி Lok Satta என்ற இந்தி ஊடகம் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள கல்வானின் சிவாஜிநகர் பகுதியின் பழைய ஓடூர் சாலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பால்சந்திர மல்புரே (85) என்பவரை மாடு தாக்கியது. பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக கல்வான் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Times of India ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும், Lok Mat Times ஊடகம் உயிரிழந்தவரின் புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டு மாடுகள் ஒருவரை தாக்கியதாக வைரலாகும் காணொலியில் உள்ள நிகழ்வு உண்மையில் மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.