கோவையில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் பானி பூரி 
Tamil

Fact Check: கோவையில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி விற்பனை செய்யப்பட்டதா?

Ahamed Ali

“கோவை பிஎஸ்ஜி அருகில் நடந்த சம்பவம் முழுவதுமாக பாருங்கள்” என்ற கேப்ஷனுடன் நபர் ஒருவர் சுகாதாரமற்ற முறையில் பானி பூரி விற்பனை செய்வது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இக்காணொலி புனையப்பட்டது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொளியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Sanjjanaa Galrani என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஜூன் 25ஆம் தேதி வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டு இருந்தது.

அதில், “இப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள காணொலிகள் புனையப்பட்டவை. மேலும், கல்வி மற்றும் பொழுதுபோக்கிற்காக வெளியிட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காணொலி வெளியாகியுள்ள பேஸ்புக் பக்கத்தில் இதே போன்று பல்வேறு புனையப்பட்ட காணொலிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைக்கொண்டு வைரலாகும் காணொலியும் புனையப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

புனையப்பட்ட காணொலி என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Conclusion:

நம் தேடலின் முடிவாக கோவை பிஎஸ்ஜி கல்லூரி அருகே சுகாதாரமற்ற முறையில் பானி பூரி விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி புனையப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Fake letter claims Adani Group threatens to expose corrupt officials in Kenya

Fact Check: ക്രിസ്ത്യന്‍ സെമിനാരിയില്‍ ഇസ്ലാം മതപഠനമോ? പ്രചാരണത്തിന്റെ വാസ്തവമറിയാം

Fact Check: மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் பாலஸ்தீனியர்களை அந்நாட்டுப் பிரதமர் நேரில் சென்று சந்தித்தாரா?

ఫ్యాక్ట్ చెక్: ఐకానిక్ ఫోటోను ఎమర్జెన్సీ తర్వాత ఇందిరా గాంధీకి సీతారాం ఏచూరి క్షమాపణలు చెబుతున్నట్లుగా తప్పుగా షేర్ చేశారు.

Fact Check: ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ಜಿಹಾದಿಗಳಿಂದ ಇಬ್ಬರು ಹಿಂದೂ ಹುಡುಗಿಯರ ಅಪಹರಣ ಎಂದು ಈಜಿಪ್ಟ್​​ನ ವೀಡಿಯೊ ವೈರಲ್