விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் “திமுக ஒரு தீய சக்தி… திமுக ஒரு தீய சக்தி… திமுக ஒரு தீய சக்தி…” என்பதை மூன்று முறை கூறியதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact check:
சவுத் செக்கின் ஆய்வில் திமுக ஒரு தீய சக்தி என்று விஜய் கூறியதை சுட்டிக்காட்டி திருமாவளவன் பேசியதை தவறாக திரித்துப் பரப்புகின்றனர்.
உண்மையில் திருமாவளவன் திமுகவை “திமுக ஒரு தீய சக்தி” என்று கூறினாரா என்பதை தேடுகையில். தந்தி ஊடகம் திருமாவளவன் பேசிய காணொலியை நேற்று(டிச. 23) வெளியிட்டு இருந்தது.
அதில்,0:22 முதல் 1:00 வரையிலான பகுதியில் பேசும் திருமாவளவன், “தற்போது புதிதாக கட்சி துவக்கிய ஒரு தம்பி (விஜய்), அவருக்கு ஒரே ஒரு அஜெண்டா தான், ஒரு கட்சி ஒரு அஜெண்டா” என்று கூறிவிட்டு. ”திமுக ஒரு தீய சக்தி” என்று மூன்று முறை கூறுகிறார்.
பிறகு பேசும் அவர், “நீங்கள் திமுகவை திட்டுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரிந்து விட்டது. நீங்கள் தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ் மண்ணிற்காகவும் போராடுவதற்காக கட்சி துவங்கவில்லை திமுகவை வீழ்த்த நினைக்கின்ற ஆர்எஸ்எஸிற்காக நீங்கள் கட்சி துவங்கியுள்ளீர்கள்” என்று கூறுகிறார்.
Conclusion:
முடிவாக, நம் தேடலின் “திமுக ஒரு தீய சக்தி...” என்று நடிகர் விஜய் கூறியதை திருமாவளவன் சுட்டிக்காட்டி பேசிய ஒரு பகுதியை மட்டும் எடுத்து தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.