படிக்க சென்ற இடத்தில் பாடம் எடுக்கும் அண்ணாமலை 
Tamil

Fact Check: படிக்க சென்ற இடத்தில் பாடம் எடுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை; உண்மை என்ன?

லண்டனுக்கு சென்ற அண்ணாமலை அங்கு பாடம் எடுப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

Ahamed Ali

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் கல்வி (Chevening Gurukul Fellowship) பயில ஆகஸ்ட் 28ஆம் தேதி லண்டன் சென்றவர் வரும் 28ம் தேதி லண்டனில் இருந்து அவர் தமிழ்நாடு திரும்ப உள்ளார். இந்நிலையில், “படிக்க போனார்ன்-னு நினைச்சா பாடமெடுத்துட்டு இருக்கார்… என்ன மனுஷன்-யா…” என்ற கேப்ஷனுடன் அண்ணாமலை பலருடன் உரையாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இதன் மூலம் கல்வி பயில சென்ற இடத்தில் அண்ணாமலை பாடம் எடுப்பதாகக் கூறி இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரியவந்தது. 

இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய அண்ணாமலை இது தொடர்பாக தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளாரா என்று அவரது சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். அப்போது, கடந்த நவம்பர் 8ஆம் தேதி எக்ஸ் தளத்தில் வைரலாகும் புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில், “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் Blavatnik School இல், அரசியல் மற்றும் பொதுக் கொள்கை பேராசிரியர் Maya J Tudor மற்றும் நடத்தை பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கை பேராசிரியரான ஆனந்தி மணி ஆகியோருடன் விவாதம் நடந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நவம்பர் 7ஆம் தேதி மற்றொரு வைரலாகும் புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இந்திய தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய விவாதத்தின் போது பேராசிரியர் ஸ்ரீவாஸ் கலந்துரையாடினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Conclusion:

நம் தேடலின் முடிவாக கல்வி பயில சென்ற இடத்தில் அண்ணாமலை பாடம் எடுப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் உண்மையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுடன் அண்ணாமலை ஈடுபட்ட விவாதங்களின் புகைப்படங்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Potholes on Kerala road caught on camera? No, viral image is old

Fact Check: ഇത് റഷ്യയിലുണ്ടായ സുനാമി ദൃശ്യങ്ങളോ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ஏவுகணை ஏவக்கூடிய ட்ரோன் தயாரித்துள்ள இந்தியா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி

Fact Check: ರಷ್ಯಾದ ಕಮ್ಚಟ್ಕಾದಲ್ಲಿ ಭೂಕಂಪ, ಸುನಾಮಿ ಎಚ್ಚರಿಕೆ ಎಂದು ಹಳೆಯ ವೀಡಿಯೊ ವೈರಲ್

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి