வயநாடு நிலச்சரிவில் மகனை மீட்ட தாய் என வைரலாகும் காணொலி 
Tamil

Fact Check: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய மகனைக் காப்பாற்றினாரா தாய்? உண்மை என்ன?

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தனது மகனை தாய் காப்பாற்றியதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டுகிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நீர்வீழ்ச்சியின் பக்கவாட்டில் தனது மகனை தாய் காப்பாற்றுகிறார் என்றும் இது வயநாட்டில் நடைபெற்ற சம்பவம் என்றும் கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இச்சம்பவம் இரானில் நடைபெற்றது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, India Times கடந்த ஜுலை 30ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, வைரலாகும் காணொலியில் இடம்பெற்றிருந்த சம்பவம் இரானில் நடைபெற்றது தெரியவந்தது.

மேலும், அஸாமைச் சேர்ந்த The Sentinel ஊடகம் 2023ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி இதுதொடர்பாக விரிவாக தனது யூடியூப் சேனலில் காணொலி வெளியிட்டிருந்தது. அதில், “வடக்கு இரானின் கிலான் மாகாணத்தின் பரேசார் பகுதியில் உள்ள விசாதர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுக முயன்ற தனது தம்பியை அக்கா காப்பாற்றினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெறவில்லை.

இதே செய்தியை இரான் ஊடகமான Hamshahrionline வெளியிட்டுள்ளது. இது குறித்து BBC Persian வெளியிட்டுள்ள செய்தியில், “Razvanshahr நகரின் Red Crescent Societyன் தலைவர் கோஷா பெஹ்பூதி கூறுகையில், இந்த அருவியில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இச்சம்பவம் நடைபெற்றது. ஏற்கனவே பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது பள்ளத்தில் கீழே விழுந்து இறந்து போனார். இதற்கு முன்பு விசாதர் நீர்வீழ்ச்சிக்கு சிறப்பு பாதுகாவலர் இல்லை, ஆனால் இப்போது பெரேசர் நகராட்சி இந்த நீர்வீழ்ச்சிக்கு பாதுகாப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்யும் பொறுப்பை கொண்டுள்ளது” என்றார்.

Conclusion:

நமது தேடலின் முடிவாக வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தனது மகனை தாய் காப்பாற்றியதாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் அது உண்மையில் இரானில் நடைபெற்ற சம்பவம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Pro-Palestine march in Kerala? No, video shows protest against toll booth

Fact Check: ഓണം ബംപറടിച്ച സ്ത്രീയുടെ ചിത്രം? സത്യമറിയാം

Fact Check: யோகி ஆதித்யநாத்தை ஆதரித்து தீப்பந்தத்துடன் பேரணி நடத்தினரா பொதுமக்கள்? உண்மை என்ன

Fact Check: Christian church vandalised in India? No, video is from Pakistan

Fact Check: ಕಾಂತಾರ ಚಾಪ್ಟರ್ 1 ಸಿನಿಮಾ ನೋಡಿ ರಶ್ಮಿಕಾ ರಿಯಾಕ್ಷನ್ ಎಂದು 2022ರ ವೀಡಿಯೊ ವೈರಲ್