பிரதமர் மோடி ஆட்சியில் நொய்டாவில் போடப்பட்டுள்ள ஆறு வழிச்சாலை 
Tamil

Fact Check: நொய்டா - கிரேட்டர் நொய்டா இடையே போடப்பட்டுள்ள ஆறு வழிச்சாலை என்று வைரலாகும் புகைப்படம்? உண்மை என்ன

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நொய்டா - கிரேட்டர் நொய்டா இடையே போடப்பட்டுள்ள ஆறு வழிச்சாலை என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

Ahamed Ali

“அற்புதமான இந்த நீண்ட சாலை அமெரிக்கா இல்லை நமது இந்தியாவில் டெல்லியில் உள்ள நொய்டா - கிரேட்டர் நொய்டா இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை தான்!!!! தி மோதி சர்கார்” என்ற கேப்ஷனுடன் பிரம்மாண்டமான நெடுஞ்சாலையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் தெரிய வந்தது.

வைரலாகும் தகவல் உண்மை தானா என்பதை கண்டறிய புகைப்படத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, வைரலாகும் அதே புகைப்படத்தை நொய்டா - கிரேட்டர் நொய்டா இடையிலான ஆறுவழி சாலை என்ற தகவலுடன் India ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Hive Moderation ஆய்வு முடிவு

தொடர்ந்து, இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய Hive Moderation மற்றும் wasitai ஆகிய இணையதளங்களில் வைரலாகும் புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்தோம். அப்போது, இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்ற முடிவை இரண்டு இனையதளங்களும் தந்தன.

wasitai ஆய்வு முடிவு

Conclusion:

முடிவாக, நம் தேடலில் நொய்டா - கிரேட்டர் நொய்டா இடையிலான ஆறுவழி சாலை என்று வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Bihar polls – Kharge warns people against Rahul, Tejashwi Yadav? No, video is edited

Fact Check: കേരളത്തിലെ അതിദരിദ്ര കുടുംബം - ചിത്രത്തിന്റെ സത്യമറിയാം

Fact Check: சமீபத்திய மழையின் போது சென்னையின் சாலையில் படுகுழி ஏற்பட்டதா? உண்மை என்ன

Fact Check: ಹಿಜಾಬ್ ಕಾನೂನು ರದ್ದುಗೊಳಿಸಿದ್ದಕ್ಕೆ ಇರಾನಿನ ಮಹಿಳೆಯರು ಹಿಜಾಬ್‌ಗಳನ್ನು ಸುಟ್ಟು ಸಂಭ್ರಮಿಸಿದ್ದಾರೆಯೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: వాట్సాప్, ఫోన్ కాల్ కొత్త నియమాలు త్వరలోనే అమల్లోకి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి