சீமான் குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக பரவும் போலி நியூஸ் கார்ட் 
Tamil

அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் கட்சிக்காரர்கள் அதனை கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினாரா சீமான்?

தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் அத்தொகையை கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும் என்று சீமான் கூறியதாக புதிய தலைமுறையின் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Ahamed Ali

“நிவாரணத்தொகை - சீமான் வேண்டுகோள். தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் அத்தொகையை நம் கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும் என சீமான் வேண்டுகோள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி” என்று நேற்று(டிசம்பர் 18) தேதியிட்ட புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் நியூஸ் கார்ட்

Fact-check:

இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய நியூஸ் கார்டில் இருக்கும் தகவல் குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, சீமான் அவ்வாறாக எதுவும் பேசியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது.

மேலும், புதிய தலைமுறை அதன் லோகோ மற்றும் நியூஸ் கார்டின் அமைப்பை டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாற்றி அமைத்துள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தோமானால் தற்போது வைரலாகும் டிசம்பர் 18ஆம் தேதியிட்ட நியூஸ் கார்ட் பழைய லோகோ மற்றும் வடிவமைப்புடன் இருப்பதை நம்மால் காண முடிகிறது.

புதிய மற்றும் போலி நியூஸ் கார்டில் உள்ள வித்தியாசங்கள்

இதனை உறுதிப்படுத்த புதிய தலைமுறையின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் பரிசல் கிருஷ்ணாவை தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த நியூஸ் கார்ட் போலியானது தான். புதிய தலைமுறை வெளியிடவில்லை" என்றார். மேலும், "புதிய தலைமுறையின் பேரில் வெளியாகும் போலி நியூஸ் கார்டுகள் குறித்த அப்டேட்களை புதிய தலைமுறை இணையதளத்தில் உள்ள Live Updates என்ற பகுதியில் தெரிந்துகொள்ளலாம்” என்று கூறினார்.

போலி என்று விளக்கமளித்துள்ள புதிய தலைமுறை

Conclusion:

நம் தேடலின் முடிவில் தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் அத்தொகையை கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும் என்று சீமான் கூறியதாக வைரலாகும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Potholes on Kerala road caught on camera? No, viral image is old

Fact Check: ഇത് റഷ്യയിലുണ്ടായ സുനാമി ദൃശ്യങ്ങളോ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ஏவுகணை ஏவக்கூடிய ட்ரோன் தயாரித்துள்ள இந்தியா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி

Fact Check: ಬುರ್ಖಾ ಧರಿಸಿ ಸಿಕ್ಕಿಬಿದ್ದ ವ್ಯಕ್ತಿಯೊಬ್ಬನ ಬಾಂಗ್ಲಾದೇಶದ ವೀಡಿಯೊ ಭಾರತದ್ದು ಎಂದು ವೈರಲ್

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి