சென்னை வெள்ளம் தொடர்பாக வைரலாகும் பழைய புகைப்படம் மற்றும் காணொலி 
Tamil

சென்னை வெள்ளம்; வைரலாகும் பழைய புகைப்படம் மற்றும் காணொலி!

சென்னை வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் புகைப்படம்

Ahamed Ali

“குறைந்த விலையில் சிறந்த மனைகள் விற்கப்படும்” என்று நையாண்டியாக சமீபத்திய சென்னை வெள்ளத்தில் மனைகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே போன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் மூங்கில் படகுடன் நிவாரணப் பணியில் ஈடுபடுவது போன்ற புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் சீமானின் புகைப்படம்

Fact-check:

முதலில், மனைகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததாக வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி" பகுதியில் உள்ள மனைகள் என்று AMK Memes அமுக மீம்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி 2021ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதே ஆண்டு பல்வேறு ஃபேஸ்புக் பக்கங்களிலும்(பதிவு 1, பதிவு 2)  இதே காணொலி வெளியாகியுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்று நம்மால் உறுதிபடுத்த முடிகிறது.

தொடர்ந்து, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் படகுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் சீமான் குறித்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வி.ராஜமருதவேல் கொடிக்கமுண்டார் என்ற Quora Tamil பயனர் வைரலாகும் அதே புகைப்படத்தை Quoraவில் கடந்த ஆண்டு பதிவிட்டுள்ளார். இதன்மூலம், முதற்கட்டமாக இது பழையது என்பது உறுதியாகிறது.

தொடர்ந்து, இது குறித்து தேடும் போது, “சின்னப்போருர்- நிவாரணப் பணியில் சீமான்” என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி காணொலி ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. வைரலாகும் காணொலியில் இருக்கும் அதே உடை மற்றும் மூங்கில் படகில் இரவு நேரத்தில் சீமான் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருப்பதை நம்மால் காணமுடிகிறது.

Conclusion:

நம் தேடலின் முடிவில், சென்னையில் மனைகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததாக வைரலாகும் காணொலி பழையது என்றும், தாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது ஏற்பட்டுள்ள சென்னை வெள்ளத்தின் போது நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபடுவது போன்று வைரலாகும் புகைப்படம் 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Potholes on Kerala road caught on camera? No, viral image is old

Fact Check: ഇത് റഷ്യയിലുണ്ടായ സുനാമി ദൃശ്യങ്ങളോ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ஏவுகணை ஏவக்கூடிய ட்ரோன் தயாரித்துள்ள இந்தியா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி

Fact Check: ಬುರ್ಖಾ ಧರಿಸಿ ಸಿಕ್ಕಿಬಿದ್ದ ವ್ಯಕ್ತಿಯೊಬ್ಬನ ಬಾಂಗ್ಲಾದೇಶದ ವೀಡಿಯೊ ಭಾರತದ್ದು ಎಂದು ವೈರಲ್

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి